யார் எதிர்த்தாலும் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடிவிட மாட்டோம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
அக்கல்லூரியின் தலைவர் டாக்டர் நெவில் பிரணாந்து இதனை அறிவித்துள்ளார்.
சைட்டம் நெருக்கடி தொடர்பில் முன்னெடுக்கவுள்ள தீர்வு என்னவென அவரிடம் நேற்று (23) வினவிய போதே இதனைக் கூறியுள்ளார்.
சைட்டமை எதிர்ப்பவர்களின் குழுவிலுள்ள சிலரின் பிள்ளைகளும் வெளிநாட்டு மருத்துவ பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று வருகின்றனர். பாணந்துரை வைத்தியசாலையில் நான் கட்டிக்கொடுத்த கட்டிடத்திலேயே சைட்டமுக்கு எதிரான சுவரொட்டிகள், பெனர்களை காட்சிப்படுத்தப்படுகின்றன.
1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இந்த வைத்தியசாலையை புனரமைப்பு செய்தேன். அந்த வைத்தியசாலைக்கு எனது பெயரை வைக்குமாறு அப்போது எனது ஆதரவாளர்கள் கூறினார்கள். நான் அதற்கு விரும்பவில்லை. எப்போதாவது நானாகவே ஒரு வைத்தியசாலையை ஆரம்பித்து அதற்கு எனது பெயரை வைப்பதாக நான் எனது ஆதரவாளர்களிடம் தெரிவித்தேன் எனவும் டாக்டர் நெவில் பிரணாந்து கூறியுள்ளார்.