மோடி வருகைக்கு எதிர்ப்பு: கறுப்பு பலூன் பறக்கவிட்டு நூதன போராட்டம்!!

ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதி யோகி சிவன் சிலையைக் திறக்க கோவைக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புக்கள் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆகாய மார்க்கமாக கறுப்பு பலூன் பறக்கவிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

கோவையில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள 112 அடி உயர “ஆதியோகி’ சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி.லக்னோவில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார்.

கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றனர். மேலும் பிரதமர் வருகையையொட்டி கோவை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரதமர் மோடி வருகைக்கு கடும் எதிர்ப்பும் உள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புக்கள் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆகாய மார்க்கமாக கறுப்பு பலூன் பறக்கவிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.