வெயிலால் வாடும் சுவிஸ்!

ஸ்விற்சர்லாந்து நாட்டில் பல இடங்களில் இதுவரையில்லாத அளவு பிப்ரவரி மாதத்தில் வெயில் அதிகரித்துள்ளது.

ஸ்விற்சர்லாந்து நாட்டில் ஏப்ரல் மாதத்தில் இருப்பது போன்ற வெயில் அதிகம் கொண்ட வானிலை தற்போது நிலவி வருகிறது.

Nyon, Sion, Aigle போன்ற சுவிஸின் பல நகரங்களில் இதுவரை பிப்ரவரி மாதங்களில் இல்லாத அளவு வெயில் இந்த பிப்ரவரியில் ஏற்பட்டுள்ளது.

Sionல் 21.2 என்ற டிகிரி வெயில் உள்ளது. இதற்கு முன்னர் கடந்த 1998ல் 19.8 டிகிரி வெயில் தான் அதிகபட்சமாக இருந்தது.

நாட்டில் பல இடங்களில் சராசரியாக 20 டிகிரி என்ற அளவில் வானிலை உள்ளது. ஸ்விஸின் மிக பெரிய நகரமான Zurichல் 19.5 டிகிரியும், சுவிஸின் தலைநகரான Bernல் 18.5 டிகிரியும் பதிவாகியுள்ளது.

இதுவரை பிப்ரவரியில் இல்லாத உச்சத்தை இந்த வருட பிப்ரவரி தொட்டாலும், நேற்றிலிருந்து வெயில் குறைய ஆரம்பித்து மீண்டும் குளிரெடுக்க தொடங்கியுள்ளது.