`என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் – மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘குற்றம் 23’. ரெதான் – தி சினிமா  பீப்பல் நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்துள்ள இப்படம் மெடிக்கல் – கிரைம் – திரில்லர் பாணியில் உருவாகியுள்ள  ‘குற்றம் 23’ படம் வரும் மார்ச் 3-ஆம் தேதி வெளியாகிறது.

`குற்றம் 23′ படம் குறித்து படத்தின் இயக்குநர் அறிவழகன் தெரிவித்ததாவது,

‘என்னை அறிந்தால்’ படத்தில் சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட அருண் விஜயை, ‘குற்றம் 23’ படம் மூலம் சட்டத்தை பாதுகாக்கும்  ஒரு காவல்துறை அதிகாரியாக ரசிகர்கள் ரசிக்கும் வகையில் உருவாக்கியுள்ளதாக அறிவழகன் கூறினார். போலீஸ்  அதிகாரியாக தன்னுடைய கதாபாத்திரம் கனகச்சிதமாக உருவாக அருண் விஜய் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து  கொண்டதாகவும் அவர் கூறினார்.

முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய், அவருடைய வேடம் மிக சரியாக அமைய பல முயற்சிகளை  மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.