விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான `மாவீரன் கிட்டு’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஷ்ணு முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து விஷ்ணு, முருகானந்தம் இயக்கத்தில் `கதாநாயகன்’ மற்றும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், `முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம் உடன் மீண்டும் இணைய இணைகிறார். சைக்கோ த்ரில்லர் படமாக உருவாக உள்ள இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் துணை இயக்குநராக நடிக்கும் விஷ்ணு பல இன்னல்களை சந்திக்கிறார். மேலும் ஒரு சம்பவம் குறித்த முக்கிய துப்புதுலக்க வேண்டிய வேலையிலும் ஈடுபடுகிறார். முன்னதாக கிடைத்த தகவலின் படி சுசான் ஜார்ஜ் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இரவு நேரத்தில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை அசஸ் பிலிம் பேக்டரி மற்றும் ஸ்கைலார்க் என்டர்டெயின்ட்மண்ட் தயாரிக்கிறது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.