தேவையான பொருட்கள் :
பச்சை பட்டாணி – 1 கப்
கோதுமை மாவு – 1 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
மாங்காய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
* இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
* பச்சை பட்டாணியை கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்த பின், அரைத்து வைத்துள்ள பச்சை பட்டாணி கலவையை சேர்த்து 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மாங்காய் தூள் சேர்த்து வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
* பின்னர் அந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் தேய்த்து, நடுவே சிறிது பச்சை பட்டாணி கலவையை நடுவில் வைத்து மூடி, மீண்டும் மெதுவாக சப்பாத்தி போல் தேய்க்க வேண்டும்.
* தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
* இப்போது சுவையான பச்சை பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி!!!