ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவால் தொடங்கப்பட்ட எம்ஜிஆர்- அம்மா-தீபா பேரவையின் நிர்வாகிகளின் பெயரை தீபா அறிவித்தார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளான கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அரசியல் அமைப்பை ஜெ.தீபா தொடங்கி வைத்ததோடு அதன் கொடியையும் அறிமுகத்தினார். பின்னர் தான் தொடங்கியது அரசியல் கட்சி இல்லை என்றும் பேரமைப்பு மட்டுமே என்றும், இரட்டை இலையை மீட்டெடுப்பேன் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையின் நிர்வாகிகளை தீபா அறிவித்தார். அந்த பேரவையின் தலைவராக ஆர். சரண்யாவும், மாநிலச் செயலாளராக ஏ.வி. ராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைப்பின் முக்கிய பதவியான பொருளாளர் பதவியை தன்வசமே வைத்துக் கொண்டார் தீபா.