ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை விற்றுவிடக்கூடாது என்பதற்காகவே சசிகலாவை முதல்வராக்க விரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தான் சசிகலாவை முதல்வராக்க விரும்பியது ஏன் என்பது குறித்து விளக்கமளித்தார்.
அவர் பேசியதாவது, ஸ்டாலின் பதவி ஆசையால் சட்டப்பேரவையில் சட்டையை கிழித்துக்கொண்டு வந்தார். ஜெயலலிதாவுக்கு ஒ.பன்னீர்செல்வம் துரோகம் செய்துவிட்டார்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டசபை கூடியபோது அதிக பெரும்பான்மையை காட்ட வேண்டும் என்பதற்காக நாங்கள் எப்படி அமைதிக்காத்தோம் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். பன்னீர்செல்வம் அதிமுகவை விற்றுவிடக் கூடாது என்பதற்காகவே சசிகலாவை முதல் அமைச்சராக்க துடித்தோம்,. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.