ஜெயலலிதாவின் இறப்புக்கு திமுகவின் சதி தான் காரணம் என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.அதிமுகவை ஒழிக்க திமுக மறைமுகமான சதிகளை செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சசிகலாவின் தீவிர ஆதரவாளரும் அதிமுக எம்பி மற்றும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதாவின் இறப்புக்கு திமுகவின் சதிதான் காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் பேசியதாவது, திமுகவினர் திட்டமிட்டே, வேண்டுமென்றே அதிமுகவை ஒழிப்பதற்காக, மறைமுகமான சில சதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். ஜெயலலிதா மீது எந்த குற்றமும் கிடையாது.
இவர்கள்தான் வழக்கு தொடர்ந்து, எப்படியாவது ஜெயலலிதா சிறைக்கு செல்ல வேண்டும். சிறைக்கு சென்றால் அந்த காலக்கட்டத்திலேயே அவர் இறந்துவிடுவார் என்று திட்டமிட்டது. திமுக சதிதான் ஜெயலலிதாவின் இறப்புக்குக் காரணம். இவ்வாறு சசிகலா தரப்பு ஆதரவாளரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை கூறினார்.