விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ் நடித்துள்ள படம் ‘எமன்’. ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை லைக்கா புரொக்ஷன் சார்பில் ராஜு மகாலிங்கம், விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இதில் தியாகராஜன் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். இது குறித்து கூறிய தியாகராஜன்…
“சில வருட கால இடைவேளைக்கு பிறகு நடிக்க முடிவு செய்த நான், என்னுடைய கதாபாத்திரங்களை மிக கவனமாக தேர்வு செய்து வருகிறேன். ஒரு சில கதைகளை கேட்ட உடனே அதில் நடித்தாக வேண்டும் என்று தோன்றும். அப்படி கதை கேட்டதும் என் மனதில் தோன்றிய திரைப்படம் தான் ‘எமன்’. இது எதிர்பாராத திருப்புமுனைகளை உள்ளடக்கி, முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. ‘எமன்’. இது திரைப்படத்தில் நான் ஒரு முக்கியமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். நல்ல வலுவான கதையம்சமத்தோடு ஜீவா சங்கர் உருவாக்கி இருக்கும் இந்த ‘எமன்’ படம் மூலம், விஜய் ஆண்டனி நிச்சயம் மேலும் உயரத்தை தொடுவார்” என்றார்.