ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘2.0’. இதில் ரஜினி ஜோடியாக எமிஜாக்சன் நடிக்கிறார். வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமார் நடிக்கிறார்.
லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை ரூ.400 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இது இந்தியாவில் அதிக செலவில் தயாராகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படத்தை ரூ.350 கோடிக்கு தயாரிப்பு நிறுவனம் இன்சூரன்ஸ் செய்துள்ளது.
படப்பிடிப்பின் போது ஏற்படும் விபத்துக்கள், உயிர் இழப்பு, படப்பிடிப்பு பொருட்கள் சேதம், செட் சேதம் அடைதல் போன்றவற்றுக்கு இந்த இன்சூரன்ஸ் மூலம் இழப்பீடு பெற முடியும். சமீபத்தில் வேறு சில படங்களுக்காக நடந்த படப்பிடிப்பின் போது, தீவிபத்து, உயிர் இழப்பு போன்றவை ஏற்பட்டுள்ளன. இது போன்ற பிரச்சினைகளால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டவே இந்த படம் இன்சூரன்சு செய்யப்பட்டு இருப்பதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஏராளமான ஹாலிவுட் கலைஞர்கள் பணிபுரிகிறார்கள். பிரமாண்ட கிராபிக்ஸ் பணிகள் வெளிநாடுகளில் நடைபெறுகின்றன. 3டி மற்றும் நவீன தொழில் நுட்பத்துடன் ‘2.0’ படம் தயாராகிறது. இதன் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் செய்தவற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கி விட்டது என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.