மேஷம்
- மேஷம்: எதையும் சமா ளிக்கும் சாமர்த்தியம் பிறக் கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுக மாவார். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங் கள் உதவுவார்கள். வெளி யூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியா பாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
-
கடகம்
கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், யாரும் உங்களை புரிந்துக் கொள் ளவில்லை என ஆதங்கப் படுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்கு களை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
-
கன்னி
கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அதிகாரப் பதவி யில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். அமோகமான நாள்.
-
துலாம்
துலாம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.
-
தனுசு
தனுசு: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத் தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.
-
மகரம்
மகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத் தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார் கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.
-
கும்பம்
கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். குடும் பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத் துக் கொள்ளாதீர்கள். நேர்மறை எண்ணங் கள் தேவைப்படும் நாள்.
-
மீனம்
மீனம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்கள் உண்டு. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.