வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையை முற்றாகத் தடை செய்யவேண்டும்.
நாளை திங்கட்கிழமை முதல் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் இது தொடாபாக அறிவிக்கப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தற்போது வடக்கில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனைத் துரித கதியில் கட்டுப்படுத்தும் நோக்கில் மாகாண சுகாதார அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.
கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
உள்ளூராட்சி சபைகளும், சுகாதாரத் திணைக்களமும் இணைந்து தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தும் இணைந்த செயற்றிட்ட முன்னெடுப்புத் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
வடக்கில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிப்பதற்குத் திண்மக் கழிவகற்றப்படாமையே முக்கிய காரணமாக உள்ளது.
திண்மக் கழிவுகள் அகற்றப்படுவதற்கு ஆளணிகள் தேவைப்படின் அந்த விவரங்களை அமைச்சின் செயலருக்கு அறிவித்து மேலதிக ஆளணியை அதிகரித்து கழிவுகளை உடனுக்குடன் அகற்றுவதற்கு நடடிவக்கை எடுக்கவேண்டும்.
கழிவு முகாமைத்துவம் சீராகும் பட்சத்தில் டெங்குத் நோய்த் தாக்கம் குறைவடைய வாய்ப்புள்ளது. பாடசாலைகளில் கழிவு முகாமைத்துவத்துக்காகக் குப்பைத் தொட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மாலை நேர வகுப்புக்கள் நடைபெறும் இடங்களைப் பார்வையிட்டு அறிவுறுத்தல் வழங்கவேண்டும். வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையை முற்றாகத் தடை செய்ய வேண்டும்.
பொது இடங்கள், வீடுகள், வைத்தியசாலைகள் என்பவற்றில் டெங்குத் தாக்கம் உள்ளதா என்று தொடர்ச்சியான அவதானிப்பு வேண்டும் என இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.