சிந்தித்தால் சிறப்பான பலன்களைக் கொடுப்பவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு உகந்த 12 தாண்டவங்களையும் பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. ஆனந்தத்தாண்டவம் : வலது காலை ஊன்றி, இடது காலைத் தூக்கி ஆடுவது, இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடுவது மாறுகால் தாண்டவமாகும். இறைவன் ஆனந்தமாகப் புரியும் ஏகாந்த நடனம் இது.
2. சிருங்கார தாண்டவம் : சிவனும், பார்வதியும் சேர்ந்து ஆடி நவரசங்களையும் காட்டுவது. பரமனும், பார்வதியும் புரியும் நடன விளையாடல்.
3. திரிபுர தாண்டவம் : பூமியையும் ஆகாயத்தையும் அடக்கி ஆளும் நடனம். இந்த ஆடல் நின்றால் எல்லாம் அடங்கி விடும். இது மூவுலகையும் இயக்கும் நர்த்தனம்.
4. சந்தியா தாண்டவம் : தாள வாத்தியங்கள் முழங்கிட சந்தியாவேளையில் ஈசன் ஆடுவது.
5. முனி தாண்டவம் : சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவர் தாளம் போட ஈசன் ஆடிய தாண்டவம். முனிவர்களின் வேண்டுதலுக்காக அருட்காட்சி புரிந்து ஆடியது.
6. உத்ர தாண்டவம் : அசுரர்களை வதைத்தபோது ஆடிய தாண்டவம். சினம் தெறிக்கும் சிவநடனம்.
7. ஊர்த்துவ தாண்டவம் : காளியின் கோத்தை அடக்குவதற்காக இடது காலை தலைக்கு மேலே தூக்கி ஒரே கோட்டில் அமைவது போல் ஆடிய நர்த்தனம்.
8. சம்ஹார தாண்டவம் : திருக்கடவூரில் மார்க்கண்டேயரைக் காப்பாற்ற சம்ஹார மூர்த்தியாக தோன்றி ஆடியது.
9. பிரளய தாண்டவம் : ஊழிக் காலத்தில் உலகம் அழியும் போது ஆடும் தாண்டவம்.
10. பூத தாண்டவம் : சிவபெருமான் யானைத் தோல் போத்தி, ஆயுதங்களை ஏந்தி உடலை முறுக்கி வளைத்து ஆடும் ஆட்டம்.
11. சதா தாண்டவம் : முனிவர்கள், யோகிகளின் வேண்டுகோளை ஏற்றி சதா சர்வகாலமும் நிகழ்த்தும் தெய்வீகத் தாண்டவம்.
12. புஜங்க தாண்டவம் : பாற்கடல் கடையப்பட்ட போது ஆலகாலத்தின் கொடுமையிலிருந்து தேவர்களைக் காப்பாற்ற அதை அருந்திவிட்டு ஆடிய தாண்டவம். புஜங்க தாண்டவமாகும். புஜங்கம் என்றால் பாம்பு. பாம்பணியும் பரமன் அந்தப் பாம்பைப் போலவே வளைந்து நெளிந்து ஆடியது.