யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள மடத்தடியில் இரு குழுக்களிடையே கடும் மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த மோதல் மடத்தடியிலுள்ள சுகாதார நிலையம் ஒன்றுக்கு அருகில் நடந்துள்ளதாகவும், இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை தோன்றியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கத்திகள், வாள்கள், சைலன்சர் மற்றும் பல ஆயுதங்களுடன் சுமார் இருபது பேர் வரையில் குறித்த மோதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அப்பகுதியில் உள்ள முச்சக்கர வண்டியொன்று சேதமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த பகுதியிலுள்ள வீடுகளின் மேலும் கற்கள் வீசப்பட்டதாக மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
எனினும் பொலிஸார் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் குறித்த கும்பல்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.