விமலுக்கு நீதிமன்றம் வழங்கிய சந்தர்ப்பம்!

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாராச்சி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

வெலிகடை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வீரவங்ச கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த திருத்த விண்ணப்ப மனுவை இன்று ஆராய்ந்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து வீரவங்சவின் திருத்த விண்ணப்ப மனுமீதான விசாரணைகளை எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.