வவுனியாவை அச்சுறுத்தும் பன்றிக்காய்ச்சல் தொற்று! கர்ப்பிணித் தாய்மாருக்கு எச்சரிக்கை!!

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்றிக்காச்சல் காரணமாக கடந்த 22 ஆம் திகதி இருவர் இனம் காணப்பட்டு அதி தீவிர சிகிச்சைப்பிரில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வவுனியாவில் தொடர்ந்தும் 5 பேருக்கு பன்றிக்காச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது.

குறித்த ஐவரில் நேற்று இருவருக்கும் இன்று மூவருக்குமாக மொத்தம் ஏழு பேர் என இனங்காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு. அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த 22ஆம் திகதி இனங்காணப்பட்ட 25 வயதுடைய ஹெப்பிட்டிக்கொலவ பகுதியைச் பெண்ணொருவர் தொடர்ந்தும் அதி தீவிர சிகிச்சைப்பிரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுகின்றது. இவருக்கு குழந்தை கிடைத்து ஒரு கிழமை கடந்து நிலையில் பன்றிக்காய்ச்சல் தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளார்.

அத்துடன், 37 வயதுடைய பூவரசம்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும், பன்றிக்காச்சல் ஏற்பட்டவர்களை பார்வையிடுவதற்கு கர்ப்பிணி தாய்மார், சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வரவேண்டாம் என வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு. அகிலேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.