ஜனாதிபதி ஒருவர் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் ஒரு நாட்டில் இருந்து இருவருமே நிறைவேற்று அதிகாரம் கொண்டவர்களாக மாறும் போது மோதலான நிலைமை உருவாகும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதனை தான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிடும் போதே மகிந்த ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஒன்றை நடத்த தற்போதைய அரசாங்கம் அச்சத்தில் உள்ளது.
எந்த முறையிலாவது தேர்தலை நடந்துங்கள் என்றே நாங்கள் கூறுகின்றோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, அரசாங்கமே முழுமையான பணத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.
எனது பெயரை பயன்படுத்தி பணத்தை திருட்டுத்தனமாக பெற்றுக் கொண்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
இவை அனைத்து சட்டரீதியான நடவடிக்கை அல்ல என்றால் பணத்தை பெற்றுக் கொண்டவர்களுக்கு பெரிய பிரச்சினை ஏற்படும்.
இந்த பணம் சட்டரீதியான அல்ல என்பதால் அது செல்லுபடியாகாது. பாதுகாப்பில்லை.
இப்படி நடந்தால், பணத்தை வைப்புச் செய்தவர்கள் இலங்கையில் இருந்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்வார்கள் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.