ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது அமர்வு இன்று ஜெனீவாவில் ஆரம்பமானது.
ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரஸ் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைன் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது
இதன்போது கருத்துரைத்த அவர்கள் இருவரும் உலகளாவிய ரீதியில் சமூகங்களின் உரிமைகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த அமர்வில் இலங்கை தொடர்பில் ஆணையாளர் ஹூசைன் அறிக்கை ஒன்றை முன்வைக்கவுள்ளார்.
இதன்போது போர்க்குற்ற விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களின் முன்னேற்றம் குறித்து அவர் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார்.
இந்தநிலையில் ஆணையாளரின் வருடாந்த அறிக்கை ஏற்கனவே பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவரின் அலுவலகம், நீதிமுறை, உள்நாட்டு பொறிமுறை, சாட்சி பாதுகாப்பு மற்றும் தேசிய கலந்துரையாடல் என்பவற்றுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர நாளை அமர்வில் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.