அமெரிக்க பாதுகாப்புக்காக 54 பில்லியன் டாலர்களை ஒதுக்கிய டிரம்ப்!!

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், பொறுப்பேற்றவுடன் முதல் நடவடிக்கையாக விசா நடவடிக்கைகளில் கடும்  கட்டுப்பாடுகளை கொண்டுவந்தார். இதனால் வெளிநாட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் டிரம்ப் பொறுப்பேற்ற  முதல் பாராளுமன்றக் கூட்டத்தில் பாதுகாப்புக்காக அதிக தொகையை அறிவித்துள்ளார்.

மொத்தத்தில் அமெரிக்காவுக்காக 500 பில்லியன் டாலர்களை செலவிட உள்ள டிரம்ப் அமெரிக்க பாதுகாப்புக்கு அதிக தொகையை  ஒதுக்கியுள்ளார்.

உலகிலேயே சக்தி வாய்ந்த இராணுவத்தை கொண்டுள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. தனது நாட்டு பாதுகாப்புக்காக  அதிகளவிலான தொகையை ஒதுக்குவதும் அமெரிக்காவே. அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் வாஷிங்டன்னை மையமாக  வைத்து செயல்பட்டு வருகிறது.

நாட்டில் தீவிரவாத தாக்குதல், பாதுகாப்பு குறைபாடுகளை போக்கும் வகையில், இந்த பட்ஜெட்டில் 54 பில்லியன் டாலர்களை ஒதுக்கி  டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் பாராளுமன்றக் கூட்டத்தில் அமெரிக்க பாதுகாப்புக்காக இத்தனை பில்லியன்கள்  ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வரலாற்றிலேயே பாதுகாப்புக்காக பட்ஜெட்டில் (இந்திய ரூபாய் மதிப்பில்) சுமார் ரூ.5400  கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

இதன் மூலம் வெளிநாட்டு உதவி மற்றும இராணுவம் அல்லாத அமைப்புகளுக்கான செலவு குறைக்கப்படுகிறது. மேலும் கடல்சார்ந்த  மற்றும் வானவியலில் பாதுகாப்பை அதிகரிக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கப்பற்படையை வலுப்படுத்தவும், இராணுவ விமானத்தை  பெருக்கவும் இந்த தொகையில் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.