டேட்டாக்களை திருடிய பன்னீர் செல்வம்!

பன்னீர் செல்வம் ஒரு பக்குவமற்ற தலைவர் என அதிமுக நட்சத்திர பேச்சாளர் குண்டு கல்யாண் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பொறுப்பாளரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த ஓ.பி.எஸ், அதன்மூலம் கட்சியின் டேட்டாக்களை திருடி அதில் உள்ள பெண் உறுப்பினர்களின் செல்போன் எண்களைத் தொடர்புகொண்டு தங்களின் ஆட்களின் மூலம் அவர்களை தங்கள் அணிக்கு வரும்படி மிரட்டுகின்றார்.

மறுப்பவர்களை நாகூசும் வார்த்தைகளில் பேசுகின்றனர். என் மகளுக்கும் கூட அப்படி அழைப்புகள் வந்தன. நேற்றுவரை அரசியலில் ஒரு பெண் தலைமையின் கீழ் பணியாற்றிவிட்டு இன்று பெண்களை தரக்குறைவாக பேசுபவர் எப்படி ஒரு நல்ல தலைவராக இருக்கமுடியும் என்று கூறியுள்ளார்.