பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பேசிய பொன்னையன், கடந்த செப்., 22ல், உடல் நிலை பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
அவர், மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்கு முன், சென்னை, போயஸ் தோட்ட இல்லத்தில் வைத்து, தாக்கப்பட்டிருப்பதாக தினமலரில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதன் பின், அவர் சுய நினைவு இழந்த நிலையிலேயே, அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டாராம். அடுத்த சில நாட்களிலேயே அவர் இறந்து போனாராம்.
ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனை சிகிச்சையில் இருந்த போது, முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், மருத்துவரான மைத்ரேயன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களைக்கூட, மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்கவில்லை.
ஜெயலலிதாவைப் பார்க்கச் சொன்றால், பார்க்கச் செல்பவருக்கு நோய்த் தொற்று ஏற்படும் என்று சொல்லித் தடுத்தனர். அப்படியென்றால், 73 நாட்கள், ஜெயலலிதாவின் கூடவே இருந்ததாகச் சொல்கிறாரே சசிகலா, அவருக்கு ஏன் நோய்த் தொற்று ஏற்படவில்லை?
இப்படி, ஜெயலலிதாவை யாரையும் சந்திக்க விடாமல் செய்ததோடு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட மருத்துவ சிகிச்சை அனைத்தையும் மாற்றி, மாற்றி சொன்னதில் அப்பல்லோ நிர்வாகத்துக்கும் சசிகலாவுக்கும் ரகசிய உடன்பாடு ஏற்பட்டதோ என்ற சந்தேகம் இருக்கிறது. இல்லையென்றால், சிகிச்சை விபரங்களைக்கூட ஏன் மாற்றி மாற்றி சொல்ல வேண்டும்?என்றாராம் பொன்னையன்.
ஆரம்பத்தில் இருந்து பொதுமக்களும் பிற கட்சி தலைவர்களும் ஜெ.,சாவில் மர்மம் இருக்கிறது என்று கூறிவந்த போது இதே பொன்னையன் சசி கூடாரத்தில் இருந்து அவருக்கு ஆதரவாக பதில் அளித்தது குறிப்பிடதக்கது.