சிலருக்கு தலையில் பேன் அதிகமாக இருக்கும். அத்தகையவர்களின் கைகள் எப்போதும் தலையில் தான் இருக்கும். இப்படி எந்நேரமும் தலையிலேயே கை இருந்தால், பார்ப்போர் நம்மை கேவலமாக பார்க்கக்கூடும்.
மேலும் ஒரு கூட்டத்தில் ஒருவரது தலையில் பேன் இருந்தாலும், அது மற்றொருவருக்கு மிகவும் வேகமாக பரவக்கூடும். ஆரம்பத்திலேயே பேன் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், பின் பேனைப் போக்குவது என்பது சிரமமாகிவிடும். பேன் தொல்லைக்கு கடையில் எத்தனையோ நிவாரணிகள் விற்கப்படுகிறது. அவற்றில் சில விலை அதிகமாகவும், கெமிக்கல் உள்ளதாகவும் இருக்கும்.
ஆனால் நீங்கள் இயற்கை முறையில் பேன் தொல்லையில் இருந்து விடுபட நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையைப் பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்: லிஸ்டரின் மௌத் வாஷ் வெள்ளை வினிகர் பேன் சீப்பு ஷவர் கேப் அல்லது பிளாஸ்டிக் பை டவல்
செய்யும் முறை:
* முதலில் தலைமுடியை நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பின் மௌத் வாஷ் கொண்டு அலசி, ஷவர் கேப் அல்லது பிளாஸ்டிக் பை கொண்டு தலையை சுற்றிக் கொள்ள வேண்டும்.
* 1 மணிநேரம் கழித்து, தலையில் சுற்றியுள்ளதை கழற்றி விட்டு, பின் வெள்ளை வினிகர் கொண்டு தலைமுடியை அலசி, மீண்டும் ஷவர் கேப் அல்லது பிளாஸ்டிக் பை கொண்டு தலையை சுற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் 1 மணிநேரம் ஆன பின், தலையில் உள்ளதைக் கழற்றி, ஷாம்பு பயன்படுத்தி தலையை நன்கு அலச வேண்டும்.
* இறுதியில் பேன் சீப்பு கொண்டு தலையை சீவினால், தலையில் இருந்த பேன் இறந்து உதிர்வதை நன்கு காணலாம்.