நவகிரக தோஷம் விலக மந்திரம்!!

அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயனமர்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜனி நாயகதயா
த்ருதீயா தே த்ருஷ்டிர் – தரதலித ஹேமாம்புஜ – ருசி:
ஸமாதத்தே ஸந்த்யாம் திவஸ நிசயோ – ரந்தரசரீம்

‘தேவீ, உன்னுடைய வலக்கண் சூரியனைப் போன்று திகழ்ந்து பகலை ஏற்படுத்துகிறது; உன்னுடைய இடக் கண் சந்திரனைப் போன்று திகழ்ந்து இரவை உண்டாக்குகிறது; இரண்டுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் மூன்றாவது கண்ணோ, அப்போதுதான் சிறிதே மலர்ந்த பொற்றாமரை மலரைப் போல் திகழ்ந்து, இரவுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட சந்தியா காலத்தை உணர்த்துகிறது. இரவும், பகலும், இரண்டுக்கு இடைப்பட்ட சந்தியா காலமும் உன்னுடைய கண்களில் இருந்துதான் உண்டாகிறது. எனவே தேவீ, நீயே காலங்களைப் படைப்பவளாக இருப்பதுடன், காலங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருக்கிறாய் என்பதுதான் இந்த ஸ்தோத்திரத்தின் சாரம்.

சௌந்தர்யலஹரியின் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய இயலாதவர்கள், சீர்காழி தலத்தில் அவதரித்து, அம்பிகையினால் ஞானப் பால் புகட்டப்பெற்ற திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் முழுவதையுமோ அல்லது இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஒரு பாடலை மட்டுமோ பாராயணம் செய்யலாம்.