ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தற்கொலை தாக்குதல் நடத்த பெண்கள் சிறுவர், சிறுமிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்கொலை தாக்குதலுக்கு நாய் குட்டிகளை பயன்படுத்தும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்த வீடியோவை அல் ஹசத் அல் ஷாபி என்ற தீவிரவாத அமைப்பு சிரியாவில் வெளியிட்டது.
அதில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலுக்காக ஒரு நாய்க்குட்டியின் உடலில் வெடிகுண்டு பெல்ட் கட்டுவது பதிவாகி இருந்தது. இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.