இராணுவத்தினரை களமிறக்கி அரசை கவிழ்க்க சூழ்ச்சி?

போராட்டங்களை நடத்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நாள் தோறும் கொழும்பில் போராட்டங்களை நடத்துவதனால் அரசாங்கத்தை கவிழ்த்துவிட முடியாது.

சில தரப்பினர் பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கின்றனர். அவ்வாறான சதித் திட்டங்கள் வெற்றியளிக்காது.

பாதுகாப்பு தரப்பினரை போராட்டத்தில் களமிறக்கி அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சித் திட்டமொன்றும் முன்னெடுக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.