ஜெனீவாவில் அம்பலமாகும் இலங்கையின் இரகசியம்! களத்தில் பன்னாட்டு நிபுணர்கள்!!

இலங்கையின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை கண்காணிக்கவென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட, பன்னாட்டு நிபுணர்கள் குழுவின் ஊடக மாநாடு ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆறு பன்னாட்டு நிபுணர்கள் பங்காற்றுகின்ற Sri Lanka – Monitoring Accountability Panel (MAP) இக்குழுவில் இருந்து Mr Richard J Rogers, Mr Andrew Ianuzzi ஆகியோர் இந்த ஊடக மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைச்சபை வழங்கியிருந்த பதினெட்டு மாதகால அவகாசத்தில், இலங்கை அரசாங்காத்தின் நடைப்பாடுகளை இப்பன்னாட்டுக்குழு கண்காணித்து வந்திருந்தது.

இது தொடர்பில் தனது இரண்டாவது அறிக்கையினை ஜெனீவாவில் வெளியிட்டுள்ள இக்குழு, இது தொடர்பில் ஊடக மாநாட்டினை நடாத்தி வருகின்றது.

இதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நாவில் உரையாற்றியிருந்த இன்றைய நாளில், பன்னாட்டுக்குழுவின் அறிக்கையும் ஊடகமாநாடும் இடம்பெற்று வருகின்றமை இலங்கைக்கு ஓர் பதிலடியாகவே உள்ளது என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.