சீகிரியாவை பார்வையிட பெருந்தொகை கட்டணமா? வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிருப்தி!!

சீகிரியாவை பார்வையிட செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அறிவிடப்படும் கட்டணம் அதிகம் என வெளிநாட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சீகிரியவை பார்வையிடுவதற்கு செல்லும் ஒரு வெளிநாட்டு பயணியிடம் 30 டொலர் (இலங்கையில் பணத்தில் 4530.00 ரூபாய்) அறவிடப்படுகிறது. எனினும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடம் அறிவிடப்படும் 50 ரூபாய் கட்டணத்துடன் இதனை ஒப்பிடும் போது இது மிகப்பெரிய அநீதி என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையை பார்வையிட வரும் பெரும்பான்மை சுற்றுலா பயணிகள் அநேகர் பணக்கார்கள் அல்ல என வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையில் எந்தவொரு வரலாற்று இடத்திலும் இவ்வளவு பெரிய கட்டணம் அறவிடுவதில்லை எனவும், இது தொடர்பில் ஆராயும் போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயர் கட்டணத்தை அறவிடும் போதிலும், அதற்கான உரிய வசதிகளேனும் ஏற்படுத்தி கொடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. குறைந்த பட்சம் கழிப்பறை வசதிகள் உட்பட உரிய முறையில் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சுற்றுலா வழிக்காட்டிக்கு மேலதிக கட்டணம் செலுத்த நேரிடுகின்ற நிலையில், உணவிற்காகவும் பாரிய கட்டணம் ஒன்று அறவிடப்படுகின்றது.

இதன் காரணமாக சீகிரியவை பார்வையிடுவதற்கு வரும் சுற்றுலா பயணிகள் சீகிரிய கல்லின் மீது ஏறாமல் சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிட்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.