முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கும் பாதாள உலகக் கோஷ்டியினரால் உயிர் அச்சுறுத்தல் காணப்படுகின்றது.
மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் இல்லாது ஒழிக்கப்பட்ட பாதாள உலக கோஷ்டியினர் தற்போது அதிகரித்து இருக்கின்றனர்.
குறிப்பாக ராஜபக்ஸ காலத்தில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட இவர்களை தற்போதைய நல்லாட்சி அரசானது மீண்டும் நாட்டுக்குள் வரவழைத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
மேலும் இவர்களுடன் ஆட்சியாளர்களும் வெளிப்படையாக செயற்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.