இலங்கை அணியை அனுமதித்தோம்.. ஆனால் இந்தியாவை அனுமதிக்கவில்லை: ஸ்மித் நச் பதில்

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதால் அவுஸ்திரேலியா அணி வீரர்கள் உத்வேகத்துடன் உள்ளனர்.

இந்நிலையில் அவுஸ்திரேலியா அணியின் தலைவர் ஸ்மித் இது குறித்து கூறுகையில், நாங்கள் 4502 நாட்களுக்கு பிறகுஇங்கு வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நாங்கள் அடித்த 260 ஓட்டங்களே எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று தான் சொல்லவேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அப்போட்டியின் மைதானம் இந்திய அணிக்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால் அது எங்களுக்கு சாதகமாக மாறிவிட்டது என்று கூறியுள்ளார். இதனால் பெங்களூரு மைதானம் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார்.

தற்போது ஒரு போட்டி தான் முடிந்திருக்கிறது. இன்னும் மூன்று போட்டிகள் இருக்கின்றன. நாங்களை தொடரை கைப்பற்ற வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஆனால் அது அவ்வளவு எளிதல்ல, முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, மீண்டும் எங்களை எதிர்த்து அடிப்பதற்கு தயாராக இருக்கும்.

இலங்கையில் வெற்றி பெறும் தருணங்களிலெல்லாம் அவர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதித்தோம். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை அவ்வாறு எழும்ப விடாமல் ஆடினோம் என கூறியுள்ளார்.