வங்கதேச அணிகெதிரான இலங்கை வீரர்கள் அறிவிப்பு!!

வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பெயர்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதில் 7 துடுப்பாட்ட வீரர்கள் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இத்தொடருக்கு சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேராத் அணித்தலைவராக உள்ளார்.

மேலும் முதன் முறையாக இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமார இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி வீரர்களின் முழு விபரம்:

  • ரங்கன ஹேரத் (அணித் தலைவர்)
  • திமுத் கருணாரத்ன
  • நிரோஷன் டிக்வெல்ல
  • உபுல் தரங்க
  • தனஞ்சய டி சில்வா
  • குசால் மெண்டிஸ்
  • தினேஸ் சந்திமால்
  • அசேல குணரத்ன
  • சுராங்க லக்மால்
  • நுவான் பிரதீப்
  • லஹிரு குமார
  • விகும் சஞ்சய பண்டார
  • லக்ஷான் சந்தகன்
  • டில்ருவான் பெரேரா
  • மலிந்த புஷ்பகுமார