இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் யாருக்கும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை என்று சொல்வதை விட நேரம் ஒதுக்க விருப்பம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சிக்கு ஒதுக்கும் நேரத்தில் வேறு வேலை ஏதாவது செய்து விடலாம் என்ற எண்ணம் தான் அவர்களுக்கு உள்ளது.
உடல் ஆரோக்கியத்துடன் வாழ விருப்பம் உள்ளவர்கள் தினமும் 30 நிமிடம் ஒதுக்கினால் போதுமானது. தினமும் 30 நடைப்பயிற்சி செய்வதால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை பார்க்கலாம்.
தினசரி 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால், ஒரு வருடத்தில் மூன்றரை கிலோ கொழுப்பைக் கரைக்கலாம்.
இதய நோய்கள் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் இதய நோய்க்கான வாய்ப்பை 50 சதவிகிதம் அளவுக்குக் குறைக்கலாம். மேலும், ஆறு புள்ளிகள் வரை ரத்த அழுத்தமும், கெட்ட கொழுப்பும் குறைய உதவுகிறது.
புற்றுநோய் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டப் பெண்கள் வாரத்துக்கு மூன்று முதல் ஐந்து மணி நேரமும், ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் வாரத்துக்கு ஒன்றரை மணி நேரமும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பை 50 சதவிகிதமாக அதிகரிக்கலாம்.
மன அழுத்தம் நடைப்பயிற்சி செய்வது என்டோஃபின் சுரப்பைத் தூண்டும். இதனால் ரிலாக்சேஷன் ஏற்படுகிறது. மேலும், மனப் பதற்றம் மற்றும் மன அழுத்தத்துக்கான வாய்ப்பும் இதனால் குறையும்.