நம்மில் பலரும் சாதாரண பாலை விட பாதாம் பாலை அதிகம் விரும்புவோம். ஏனென்றால், அதில் தான் அதிகமான சத்துக்கள் மற்றும் வலிமை இருக்கின்றது.
மேலும், பாதாம் பாலில் நமது உடம்பிற்கு தேவையான கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் நிறைந்திருப்தாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதிலும், பாதாம் பாலில் தேனை கலந்து குடித்தால் நிகழக்கூடிய அற்புதம் இருக்கின்றதே அளவிட முடியாதது என்று கூறப்படுகின்றது.
சரி. பாதாம் பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
பாதாம் பாலில் குறைவான கலோரிகள் மற்றும் அதிகமான புரோட்டீன்கள் உள்ளது. எனவே, தினமும் பாதால் பாலில் தேன் கலந்து குடித்து வந்தால், நமது உடலின் அதிகப்படியான எடையைக் குறைக்க உதவுகின்றது.
அல்சைமர் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் பாதாம் பாலைக் குடித்து வந்தால், அந்த நோய்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதோடு, அவர்கள் உடலின் தசை மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது.
சிறிதளவு தேனை பாதாம் பாலில் கலந்து இரவு நேரத்தில் குடித்து வந்தால், நமது மூளைக்கு தேவையான ஒய்வு கிடைக்கும். இதனால் நமக்கு இரவில் நல்ல உறக்கம் ஏற்படுகிறது.
ஒரு டம்ளர் பாதாம் பாலில் 2 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து குடித்து வந்தால், நமது உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைப்பதால், அன்றைய நாள் முழுவதும் நாம் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.
தேன் மற்றும் பாதாம் பால் நமது உடம்பிற்கு தேவையான ஊட்டத்தை அளிப்பதால், அது நமக்கு வயதான தோற்றம் ஏற்படாமல் என்றும் இளமையாக வைப்பதற்கும், சுறு சுறுப்பாக இயங்கவும் உதவுகின்றது.
நமது உடலின் சீரற்ற செரிமான பிரச்சனையால், மலச்சிக்கல், வயிறு வீக்கம் மற்றும் சீரற்ற குடலியக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே பாதாம் பாலில் தேன் கலந்து சாப்பிடுவது இந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது.
குளிர்காலங்களில் இந்த பாதாம் பால் குடித்து வந்தால், சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் மூலம் ஏற்படும் சுவாசக்கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.