சிறுநீரக கற்களும் அறுவை சிகிச்சையும்

சிறுநீரக கற்கள் என்பது தற்போது, பொதுவான பிரச்சனை ஒன்றாக மாறிவருகின்றது. சிறுநீரக கற்கள் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதனைக் கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அதனை அறுவை சிகிச்சை மூலம் தான் நீக்க வேண்டும்.

சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை நீக்க பயன்படுத்தும் சிகிச்சை முறைகள்:

* ESWL (அதிர்ச்சி அதிர்வு அலைகள் மூலம் கல் உடைத்தல்)

* PCNL (சிறுநீரக துளை மூலமாக கல்லை உடைத் தல்)

* MICRO -PCNL (நுண் – சிறுநீரக துளை மூலமாக கல்லை உடைத்தல்)

* RIRS (சிறுநீரக உள் நோக்கி மூலமாக சிறுநீரகத்தில் உள்ள கற்களை உடைத்தல்)

* (யுரேட் ரோஸ் கோபி)

* அறுவை சிகிச்சை

ESWL : (அதிர்ச்சி அதிர்வு அலைகள் மூலம் உடைத்தல்)

நவீன முறையில் இயங்கும் எந்திரத்தின் மூலம் அதிர்ச்சி அதிர்வு அலைகள் மூலம் சிறுநீரகத்தில் தோன்றும் கற்களை மயக்கமின்றி வெளி நோயாளியாக, மிக குறைந்த செலவில், எந்தவிதமான தழும்புகள் மற்றும் குருதி கசிவுயின்றி செய்யபடும்.

இந்த சிகிச்சை எவ்விதமான நோயாளிக்கும் பொருந்தும். அறுவை மருத்துவத்திற்கு பொருந்தா நோயாளிகளுக்கும், மயக்கம் தந்து சிறுநீரக கற்களை நீக்க பொருந்தா நோயாளிக்கு இம்முறை சிறந்ததாகும்.

சிறுநீரக துளை மூலமாக கற்களை உடைத்தல் (PCNL)

இந்த முறையில் சிறுநீரகம் இருக்கும் இடத்தில் சிறு துளையீட்டு, அதன் மூலமாக, சிறுநீரகத்தின் உள் அமைப்பை பார்க்கும் கருவி மூலமாக கற்களை உடைக்கும் முறையாகும். இதன் முக்கியத்துவம். இம்முறையில் கற்கள் நீக்கினால் சிகிச்சைக்கு பின் கற்கள் இருப்பதற்கு வாய்ப்பு குறைவு (97%)

* அறுவை சிகிச்சை முறை விட வலி குறைவு.

* சிகிச்சையின் உண்டாகும் பின்விளைவுகள் குறைவு.

* சிகிச்சை பின் இயல்பான வாழ்க்கை திரும்பு நாட்கள், அறுவை சிகிச்சை முறை விட குறைவு.

* இந்த முறையில் பெரிய மற்றும் சிறப்பு வகை கற்களை நீக்க முடியும்.

RIRS : (சிறுநீரக உள்நோக்கி மூலம் கற்களை உடைத்தல்)

சிறுநீரக உள் நோக்கி மூலமாக சிறுநீர் வரும் பாதையில் செலுத்தி கற்கள் இருக்கும் இடத்தை அறிந்து அவற்றை உடைக்கும் முறையாகும். இந்த முறை எல்லா வயதினர்க்கும் ஏற்றது. சூல்கொண்ட காலத்தில் உண்டாக்கும் கற்களை நீக்க பயன்படுத்தும் முறையாகும். இந்த சிகிச்சை முறையில் தழும்புகள் இருக்காது, குருதி கசிவு இருக்காது. சிகிச்சைக்கு பின் ஏற்படும் வலி குறைவு.

URS : (யுரேடஸ்கோபி)

சிறுநீர் புழையில் இருக்கும் கற்களை நீக்க பயன்படுத்தும் முறையாகும். இதில் சிறுநீரக புழை உள்நோக்கியை சிறுநீர் வெளிவரும் பாதை மூலமாக உள் செலுத்தி கற்கள் இருக்கும் இடத்தை அறிந்து அவற்றை நீக்க பயன்படுத்தும் முறையாகும்.

கர்ப்பிணி பெண்களுக்கும் அதிக உடல் எடை உள்ளவர்களுக்கும் இம்முறை சிறந்ததாகும். இதில் தழும்புகள் மற்றும் குருதிக் கசிவு இருக் காது. இம்முறையில் கற்களை நேராக அணுகுமுறையாகும்.

லேப்பரோஸ்கோபி முறை :

சிறுநீரக அடைப்பினால் உருவாகிய கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் உருவாகி யுள்ள பெரிய கற்களை இந்த முறையில் அகற்றலாம்.

Open : (அறுவை)

இந்த முறையில் சிறுநீரகத்தில் உள்ள இருக்கும் பெரிய (அ) சிக்கலான அமைப்பு உள்ள கற்களை நீக்க பயன்படுத்தப்படும். சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு இம்முறை மூலமாக கற்களை நீக்கலாம்.

சிறுநீரில் உண்டாகும் கற் களை வராமல் தடுக்க கடை பிடிக்க வேண்டியவை:-

* சிறுநீர் வரும் போது செல்லாமல் கட்டுபடுத்தக் கூடாது.

* அசைவ உணவு தவிர்க்க வேண்டும்.

* கோஸ், காலிபிளவர், கத்திரிக்காய், தக்காளி போன் றவை தவிர்க்க வேண்டும்.

* டீ, காபி போன்றவை அருந்துவதை குறைக்க வேண் டும். பால் தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளலாம்.

* மது பழக்கம் இருந்தால் அதனை தவிர்க்கவும்.

செய்ய வேண்டியவை :

* நாள் ஒன்றுக்கு 4 அல்லது 5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

* உடல் பயிற்சி செய்ய வேண்டும் (15 mini) (இருவேளை)

* நீர் சத்துள்ள காய்கள் (முள்ளங்கி, வெந்தயகீரை, புடலங்காய், பிக்கங்காய், சுரைக்காய்) போன்றவை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும்.

* வாரம் இருமுறை வாழைத் தண்டு சாறு, ஷாப் அருந்த வேண்டும்.

* உணவிற்கு பின் எலு மிச்சை சாறு (Juice) அருந்த வேண்டும். (3 Months)

* யோகாசனம்:- சவசானம், தனுர்ஆசானம், பிரணாய மாம், பாலா ஆசானம் போன்றவை செய்தால் கற்கள் வருவது குறையும்.