மஹிந்த அணிக்கு பதிலடி கொடுத்த ராஜித!

எதிரணியின் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்க தான் தயாராகவே இருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும் மோசடிகள் மிக்க 10 அமைச்சர்கள் பட்டியலில் 9ஆவது நபராக நேற்றைய தினம் அமைச்சர் ராஜிதசேனாரட்னவின் பெயரை வெளியிட்டுள்ள நிலையில் அது தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகளை எண்ணி கவலையடைகின்றேன். நான் எந்த மோசடியிலும் ஈடுபட்டதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கட்டும் அதற்கு முகம் கொடுக்க நான் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.