தேசதுரோகிகள் இனி தேச தியாகிகள்! கையொப்பமிட்டார் மைத்திரி!

1818 ஊவா வெல்லெஸ்ஸ முதலாவது சுத்திரப் போராட்டத்தில் பங்கேற்றதன் காரணமாக, தேசதுரோகிகள் என்று பெயர்குறிப்பிட்டு பட்டியல் படுத்தப்பட்டுள்ளவர்களில் 82 பேரை, தேசப்பற்றாளர்களாக அறிவிக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டார்.

வரலாற்று புகழ்மிக்க இந்த வைபவம், கண்டி ஸ்ரீ தலதாமாளிகைக்கு முன்பாக உள்ள மகுல்மடுவவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று மாலை நடைபெற்றது.