வெளிநாட்டுக்கு இனிமேல் காணிகளை விற்க முடியாது!

இலங்கை நாட்டின் காணிகளை கூறுபோட்டு வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதற்கு இனி எவருக்குமே அனுமதியளிக்க போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனைக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மேலும் நாட்டினது தேவைப்பாடுகளைப் பொறுத்து எமக்கான பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டுமே தவிர, தனிநபர்களால் நாட்டைக் கட்டுப்படுத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.