நான் என்ன திருட்டு வழக்கிலா கைது செய்யப்பட்டேன்.. என போலீசாரிடம் சீறிய சசிகலா ஜீப்பில் ஏற மறுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, கடந்த 15ம் தேதி பெங்களூர் கோர்ட்டில் சரணடைந்தார்.
இதையடுத்து கோர்ட்டுக்கு அருகேயுள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார். அந்த தூரத்தை, ஜீப்பில் அழைத்து சென்றுவிடுவதற்கு போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர்.
வைரலானது
ஆனால், சசிகலாவோ கோர்ட்டிலிருந்து நடந்தே சென்று, சிறைக்குள் நுழைந்தார். இந்த காட்சி லீக்காகி சோஷியல் மீடியாக்களில் வைரலாகியிருந்தது.
நடந்தது என்ன?
இவ்வாறு ஏன் சசிகலா நடந்தே சிறைக்கு சென்றார் என்ற கேள்வி பல மட்டத்திலும் எழுந்தது. இதுகுறித்து சசிகலாவை அழைத்துச் செல்லும்போது உடனிருந்த போலீசார் சிலர் கூறிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
“போலீஸ் ஜீப்பில் ஏற்ற முற்பட்டபோது, “நான் என்ன திருடியா” என கூறிவிட்டு, ஜீப்பில் ஏற மறுத்து, நடக்க தொடங்கிவிட்டார். எனவே கட்டாயப்படுத்தாமல் நடத்தி கூட்டிச் சென்று சிறையில் அடைத்தோம்” என்று போலீஸ்காரர் ஒருவர் தெரிவித்தார்.
சிறப்பு சலுகை இல்லை
என்னதான் சீறினாலும், சிறையில் சசிகலாவுக்கு, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டதை போன்ற சலுகைகள் வழங்கப்படவில்லை. பெட்டுக்கு பதில் கம்பளிதான் கொடுக்கப்பட்டது. சிறை சாப்பாடுதான் உட்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.