வாணியம்பாடியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு கராத்தே பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.
பின்னர் ராதாரவி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க. மூன்று பிரிவுகளாக பிரிந்து விட்டது. இதனால் நான் அக்கட்சியிலிருந்து விலகி தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்து விட்டேன்.
முதல்வர் பதவியை வகிக்க தகுதி இல்லாதவர் பழனிசாமி. அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், உண்ணாவிரத போ ராட்டம் என்றும் அறிவித்து வருகின்றனர்.அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களுக்கு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
சாதாரண ஒரு நபர் ஒரு மருத்துவமனையிலிருந்து வெளியேறும் போது அவரின் மருத்துவ அறிக்கையை உடனடியாக மருத்துவமனை அளிக்கிறது. ஆனால் ஒரு முதல்வருக்கு ஏன் அளிக்க வில்லை. இதற்கு எல்லாம் சம்மந்தப்பட்ட மருத்துவமனையும் அரசும் உரிய விளக்கங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.