வட கொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் அண்ணன் கிம் ஜாங்-நம் (42). இவர் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
அது தொடர்பாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர் முகத்தில் விஎக்ஸ் என்ற விஷ மருந்தை வீசி அவர் கொலை செய்யப்பட்டதாக மலேசிய போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மலேசிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட பெண்கள் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் மலேசிய அரசின் இந்த அறிக்கைக்கு ஐ.நா.வுக்காக வடகொரிய முன்னாள் துணை தூதர் ரீ டாங் இல் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதிபரின் அண்ணன் கிம் ஜாங்- நம் விஎக்ஸ் விஷ மருந்தால் கொலை செய்யப்பட வில்லை.
அவருக்கு ஏற்கனவே இருதய நோய், நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை இருந்தன. அதனால் கடுமையான மாரடைப்பு காரணமாக அவர் மரணம் அடைந்தார். அவர் பயணம் செய்ய தகுதியற்ற நிலையில் இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.