சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் இருந்து ‘பல்மைரா’ நகரம் மீட்பு

சிரியாவில் பாரம்பரியம் மிக்க பல்மைரா நகரை கடந்த 2015-ம் ஆண்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அப்போது அங்கு இருந்த பழமையான பாரம்பரியம் மிக்க புராதன சின்னங்களை உடைத்து அழித்தனர்.

அதை தொடர்ந்து கடந்த ஆண்டு (2016) மார்ச் மாதம் வெளியேற்றப்பட்டனர் இருந்தாலும் மீண்டும் அந்நகரை தீவிரவாதிகள் டிசம்பரில் கைப்பற்றினர்.

எனவே அவர்களை அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற்ற சிரியா ராணுவம் மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியது. அவர்களுக்கு ரஷிய ராணுவ விமானங்கள் குண்டு வீச்சு நடத்தி உதவியது.

தாக்குதலை சமாளிக்க முடியாமல் பல்மைரா நகரை விட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று முற்றிலும் வெளியேறி ஒட்டம் பிடித்தனர். அதற்கு முன்னதாக நகரின் பல முக்கிய இடங்களில் கண்ணி வெடிகளை புதைத்து வைத்தனர்.

தற்போது பல்மைரா நகரம் முழுவதும் மீட்கப்பட்டதாக சிரியா அறிவித்துள்ளது. அதை ரஷியாவும் உறுதி செய்துள்ளது. ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி ஷோங்கு, அதிபர் விளாடிமிர் புதினிடம் தெரிவித்ததாக கிரம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.