பனிப்புயல் வீசும்: பிரான்சில் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை

பிரான்ஸில் கடுமையான பனிப்புயல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பில், தெற்கு பிரான்ஸில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன், கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

பிரான்ஸின் முக்கிய பகுதிகளான Rhone, Loire, Haute-Loire, Bouches-du-Rhone, Gard, l’Hérault, Var Vacluse ஆகிய இடங்களில் இந்த தாக்கம் அதிகம் இருக்கும்.

மேலும் ஒரு மணிநேரத்திற்கு 130 கி.மீ அளவு பலத்த புயல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றானது கடலில் பயணிக்கும் படகுகளுக்கு தொந்தரவு தரும் என்பதால் பாதுகாப்பாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.