பெங்களூர் மைதானத்தில் இந்தியாவை வெல்வது கடினம்: மைக்கேல் கிளார்க்

பெங்களூரில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான மைக்கேல் கிளார்க் கூறியதாவது:-

புனே டெஸ்டில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து இருந்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருக்குமா? என்று தெரியவில்லை.

இந்திய மண்ணில் முதல் இன்னிங்சில் குவிக்கும் ரன் முக்கியமானது. அதில் 450 ரன்னுக்கு மேல் எடுத்து விட்டால் யார் டாஸ் வென்றாலும் அது ஒரு பிரச்சினை இல்லை.

நீங்கள் முதல் இனனிங்சில் பேட்டிங் செய்வதை பொறுத்தே ஆட்ட முடிவு இருக்கும். இதனால் இரு அணிகளும் ரன் குவிக்க முயலும்.

கடின ஆடுகளமான புனேவில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா எடுத்த 260 ரன் நல்ல ஸ்கோர் ஆகும். இந்த பிட்ச்சில் இந்தியாவுக்கு 150 ரன்னுக்கு மேல் வைத்து இருந்தாலும் அதை எடுப்பது கடினமானது.

புனே மைதானம் போல் பெங்களூர் இருக்காது. அங்கு இந்தியாவை வீழ்த்துவது ஆஸ்திரேலியாவுக்கு கடினமாக இருக்கும்.

இந்தியா வெற்றி பெற வேண்டுமென்றால் ஆஸ்திரேலியாவின் ஸ்டீபன் சுமித், டேவிட் வார்னர், மிட்செல் ஸ்பார்க், ஹாசல்வுட் ஆகியோருக்கு எதிராக சிறப்பாக செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.