இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரோகித் சர்மா. டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்.
தொடை எலும்பு அறுவை சிகிச்சை காரணமாக 4 மாதம் ஓய்வில் இருந்தார். காயம் குணமடைந்ததால் 4 மாதத்துக்கு பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பி உள்ளார்.
விஜய் ஹசாரே டிராபி போட்டியில் மும்பை அணியில் விளையாடும் அவர் ஆந்திரா, கோவா அணிகளுக்கு எதிராக களம் இறங்குகிறார்.
டெஸ்டில் மிடில் ஆர்டர் வரிசையில் அவருக்கு ரகானே, கருண் நாயர் ஆகியோர் கடும் போட்டியாக இருக்கிறார்கள்.
டெஸ்டில் போட்டியில் விளையாடுவது குறித்து அவர் கூறியதாவது:-
எனது கிரிக்கெட் வாழ்க்கையில் யாரையும் நான் போட்டியாக கருதவில்லை. எனக்கு நானே போட்டி. அதில் கவனம் செலுத்தி எனது நேரத்தை வீணாக்கமாட்டேன். இந்தியாவுக்காக விளையாடும் ஒரு ஆட்டத்தை கூட தவறவிட விரும்பவில்லை.
தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலியா டெஸ்டில் விளையாட விரும்புகிறேன். அதற்கு சில முயற்சிகள் எடுக்க வேண்டும். விஜய் ஹாசரே டிராபியில் 2 போட்டியில் விளையாடுவது எனது உடல் தகுதியை நிரூபிக்க உதவும் என்றார்.