தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பற்றி சர்ச்சைக்குரிய படங்களை வெளியிட்டு சிக்கலில் சிக்கியுள்ள பாடகி சுசித்ரா தனது கணவரை விவாகரத்து செய்ய தயாராகிவிட்டார்.
தமிழ் திரைப்பட பாடகி சுசித்ரா சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் மீது சில குற்றச்சாட்டுகளை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டார். அதில், ஒரு பார்ட்டியில் தனுஷும் அவரது நண்பர்களும் தன்னிடம் முரட்டுத்தனமாகக் நடந்து கொண்டதால் கையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
பின்னர், சுசித்ராவின் டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாகவும் சர்ச்சைக்குரிய பதிவுகள் அவரால் போடப்பட்டவை இல்லை என்றும் கூறப்பட்டது.
பகீர் குற்றச்சாட்டு
இந்த சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில் தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா, சின்னத்திரை பிரபலம் திவ்யதர்ஷினி போன்றவர்களின் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை சுசித்ரா தனது டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியிட்டார்.
புதிய சர்ச்சை
மேலும், தனுஷ், அனிருத், அமலா பால், சஞ்சிதா, பாடகி சின்மயி, ஆண்ட்ரியா ஆகியோரின் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட நாள், தேதி குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். மறுபடியும் தன்னுடைய டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சுசித்ரா கூறியுள்ளார்.
இதனிடையே, கணவர் கார்த்திக் குமார் சுசித்ரா மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். “சுசித்ரா மன அழுத்தில் உள்ளார். அவரை அனைவரும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருத வேண்டும். அவர் குற்றம் சாட்டிய பிரபலங்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டதற்கு நன்றி” என தெரிவித்திருந்தார்.
சுசித்ராவிற்கு மன்னிப்பு
சுசித்ரா மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது கணவர் கார்த்திக் கூறிய பின்னர், குற்றம்சாட்டப்பட்ட பிரபலங்களில் பாடகி சின்மயி, நடிகை சஞ்சிதா, செல்வராகவன் ஆகியோர் சுசித்ராவை மன்னித்துள்ளனர். இதுகுறித்து இயக்குனர் செல்வராகன், சுசித்ராவிற்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கார்த்திக் கூறியிருப்பதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
கணவருக்கு விவாகரத்து
திரையுலக பிரபலங்களின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, சுசித்ராவிற்கு மனநோய் என்று சொன்ன கணவர் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்வது குறித்து சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.