ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அபாயகரமான பரிந்துரைகள் பல காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது நாட்டுக்கு அபாயகரமானதென ஐ.நாவின் முன்னாள் இலங்கைக்கான இராஜதந்திரியான கலாநிதி தயான் தெரிவித்துள்ளார்.
போர் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மன்னிப்பு வழங்க முடியாது என ஐ.நா மனித உரிமையாளர் ஆணையாளரினால் குறிப்பிடப்பட்டிருப்பது பாரதூரமானதே.
எவ்வாறாயினும் இலங்கை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து புதிய யோசனையொன்றை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.