குழந்தையாக இருந்த போது கற்பழிக்கப்பட்டேன்: 79 வயது நடிகை ‘செக்ஸ்’ புகார்

குழந்தையாக இருந்த போது கற்பழிக்கப்பட்டதாக 79 வயது ஆலிவுட் நடிகை ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ளார்.

பிரபல முன்னாள் ஆலிவுட் நடிகை ஜானே பான்டா. தற்போது இவருக்கு 79 வயது ஆகிறது. இவர் ஆஸ்கர் விருது வென்றுள்ளார்.  சமீபத்தில் இவரை பிரி லார்சன் என்ற நடிகை ஒரு இணையதள செய்தி நிறுவனத்துக்காக பேட்டி கண்டார்.

அப்போது அவர் தனது கடந்த கால சம்பவங்களை நினைவு கூர்ந்தார். தான் நடிகையாக இருந்த போது சந்தித்த பிரபலங்கள்,  ‘செக்ஸ்’ தொந்தரவுகள் குறித்து மனம் திறந்து கருத்துக்களை தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் தான் குழந்தையாக இருந்த போது ‘செக்ஸ்’ தொந்தரவில் சிக்கியதாக கூறினார். மேலும் தான் கற்பழிக்கப்  பட்டதாகவும் பகிரங்கமாக தனது மன வேதனையை வெளிப்படுத்தினார்.

அது தனது மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தியதாகவும், பல இரவுகள் தூக்கமின்றி தவித்ததாகவும் அவர் கூறினார்.