துபாய் டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா (இந்தியா) மார்சின் மேட் கோவ்ஸ்னி (போலந்து) ஜோடி 6-4, 3-6, 3-10 என்ற செட் கணக்கில் ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து) ஹோரியா டெகாவ் (ருமேனியா இணையிடம் தோற்று சாம்பியன் பட்ட வாய்ப்பை நழுவ விட்டது.
ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 6-3, 6-2 என்ற நேர் செட்டில் பெர்னாண்டோ வெர்டஸ்கோவை (ஸ்பெயின்) வீழ்த்தி பட்டம் வென்றார்.
23 ஆண்டு கால துபாய் டென்னிஸ் வரலாற்றில் இந்த பட்டத்தை இங்கிலாந்து வீரர் ஒருவர் வெல்வது இதுவே முதல் முறையாகும்.