புலனாய்வுப் பிரிவு செயலிழந்து விட்டது!

இந்த நாட்டின் பலம் வாய்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு இப்போது முற்றாக செயலிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

போர்க்குற்றம்சாட்டப்பட்ட – ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

பொரலஸ்கமுவவில் உள்ள விடுதி ஒன்றில் நேற்றுமுன்தினம் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நான் ஒரு அனுபவமான படைவீரன், பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்ற வகையில், புலனாய்வுப் பிரிவு செயலிழந்துள்ளது என்பதை உணர முடிகிறது. இதுகுறித்து நான் எச்சரிக்கை மணி எழுப்புகிறேன்.’

புலனாய்வுப் பிரிவு முன்னர் மிகப் பலமானதாக இருந்தது. அதற்குச் சிறந்த உதாரணம், மலேசியாவில் இருந்து, கே.பியை கைது செய்து  இலங்கைக்கு கொண்டு வந்ததைக் குறிப்பிடலாம். அத்தகைய பலம்மிக்க புலனாய்வுப் பிரிவு இப்போது செயலிழந்து போயுள்ளது.

படுகொலைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு புலனாய்வு அதிகாரிகள் இப்போது கைது செய்யப்படுகிறார்கள். நாட்டுக்காக போராடியவர்கள் சிறைகளுக்குள் அடைக்கப்படுகிறார்கள்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.