பொறியில் சிக்கியுள்ள மகிந்த அரசியல் குத்துக்கரணம் அடிக்கின்றார்!

அரசியல் பொறிக்குள் சிக்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தற்போது இருவேறு அரசியலில் ஈடுபட்டு வருவதாக பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர் ஆகஸ்ட் 17ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் வரை 8 மாதங்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டே அரசாங்கத்தின் ஆட்சி நடத்தப்பட்டது என்பது இரகசியமான விடயமல்ல.

எனினும் நாடாளுமன்றத்தில் தமக்கு சார்பாக பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச அந்த காலப்பகுதியில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வர நடவடிக்கை எடுக்காது ஆச்சரியத்திற்குரிய விடயம்.

தற்போதைய ஜனாதிபதியின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான மகிந்த ராஜபக்ச பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்காத ஒதுங்கி கொள்கிறார்.

குறைந்தது வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை.மகிந்த ராஜபக்ச ஒரு அரசியல் பொறியில் சிக்கியிருப்பதையே இவை காட்டுகின்றன.

சைட்டம் பிரச்சினை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது வேறு விதமாக பேசி வருகிறார்.சைட்டம் நிறுவனத்தை ஆரம்பிக்க மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போதே மில்லியன் கணக்கான நிதி வசதிகளை பெற்றுக்கொடுக்கப்பட்டன.

எனி்னும் தற்போது அதற்கு எதிராக பேசி வருகிறார்.தமது அரசியல் பலத்தை விரிவுப்படுத்த முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது அரசியல் ஆதவாளர்கள் அரசியல் குத்துக்கரணம் அடிப்பதை கண்டிக்க வேண்டும்.

கோடிக்கணக்கில் அதிகமான வட்டியில் பணத்தை பெற்று அம்பாந்தோட்டை விமான நிலையம் மற்றும் துறைமுகம் போன்ற பொருளாதார பிரதிபலன்கள் இல்லாத திட்டங்களை உருவாக்கி முன்னாள் ஜனாதிபதி அவற்றை பலன் தரும் முதலீட்டு வலயங்களாக மாற்ற முயற்சிக்கும் எதிர்ப்பை வெளியிட்டு அரசியல் குத்துக்கரணம் அடிப்பது இதற்கு சிறந்த உதாரணம் எனவும் நிரோஷன் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.